என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் 2000 நோட்டுகளை வாங்க மறுக்கும் வர்த்தக நிறுவனங்கள்
- தினமும் பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
- ஒற்றை நோட்டை வைத்து கொண்டு மாற்ற முடியாமல் மக்கள் புலம்புகிறார்கள்.
குனியமுத்தூர்
கடந்த 19-ந் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அதனை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம் எனவும், அனைத்து வங்கிகளிலும் தினமும் பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது.
செப்டம்பர் மாதம் இறுதிவரை அனைத்து வர்த்தக நிறுவனம் மற்றும் பெட்ரோல் பங்ங் என அனைத்து இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் 2 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்படுவதாக அறிவித்ததில் இருந்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்களிடம் மூட்டை மூட்டையாக 2000 நோட்டுகள் கிடையாது. சேமித்து வைத்திருக்கும் 10 அல்லது 20 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தான் இருக்கும். ஆனால் அதனையும் கடைகளில் வாங்க மறுத்து வருகிறார்கள். எனவே செப்டம்பர் இறுதி வரை அனைத்து வர்த்தக மையங்களும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டாயமாக அறிவிக்க வேண்டும். மேலும் கட்டாயம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் என்றனர்.
நேற்று கூட கோவை சுந்தராபுரத்தை அடுத்த எல்ஐசி காலனியை சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜா அப்பாசாமி என்பவர் தனது மொபட்டில் வெளியில் சென்றார். போகும் வழியில் பெட்ரோல் தீர்ந்து விடவே அருகில் இருக்கும் பெட்ரோல் போட சென்றார். கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்துள்ளது.
இதனை கொடுத்து பெட்ரோல் போட முயன்றபோது, 500-க்கு போட்டால் வாங்கி கொள்கிறோம். இல்லையென்றால் வாங்க மாட்டோம் என கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து நேற்று மளிகை கடை, டிபன் கடைக்கு சென்று மாற்ற முயன்றும் முடியாததால் சோர்வடைந்து சுந்தராபுரம் சிக்னலில் அமர்ந்தார். அவரை போலீஸ் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கியின் அறிவி ப்பு வரவேற்க த்தக்கது. ஆனால், ஒரு திட்டம் அமுல்படுத்தும் போது, அதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அமுல்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் இறுதி வரை இந்த நோட்டை யாரும் வாங்க மறுக்கக்கூடாது என்று ஒரு சட்டம் இயற்றினால், அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த அவல நிலையை மாற்ற வேண்டும். மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் இணைந்து இதற்கு உடனே ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கி கணக்கு சரியாக வைத்திருக்கும் ஒருவர், மற்றும் மாதாமாதம் சரியாக வரி செலுத்துபவர் இதனைப் பற்றி கவலை பட வேண்டாம். மூட்டை மூட்டையாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும். எந்த ஒரு சராசரி மனிதனிடம் 2000 நோட்டுகளை பார்க்க முடியாது. ஆகவே இதனைப் பற்றி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்