என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட் அணியாததால் ஆன்லைன் மூலம் 16 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

- ஹெல்மெட் அணியாததால் ஆன்லைன் மூலம் 16 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு துணை கமிஷனர் மாடசாமி தகவல் தெரிவித்தார்.
- கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் சேலம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட ஏ.வி.ஆர், 5 ரோடு,சேலம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களுக்கு முகாமில் வைத்து விபத்து வீடியோ மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. 16 நாட்கள் நடத்த இந்த சிறப்பு முகாமில் 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஒரே ஒரு வாலிபர் மட்டும் ஹெல்மெட், ஓவர் ஸ்பீடு மூலம் ஒரு ஆண்டில் 120 முறை ஆட்டோமெட்டிங் கேமரா மூலம் ரூ.12 ஆயிரத்து 900 கட்டி உள்ளார். முதல் தடவை அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு துணை கமிஷனர் மாடசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.