search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டி இல்லாத பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    வட்டி இல்லாத பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

    • சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லாத பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
    • நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மீராபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டங்களில் உள்ள 370 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 9 லேம்ப் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 1 உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம். மேலும் இதுவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் புதிய உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்று கொள்ளலாம்.

    கடன் மனுவுடன் நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று பெற்று இணைக்க வேண்டும். நடப்பு பசலியில் பயிர் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று பெற இயலாத நேர்வில், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சென்ற ஆண்டு பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல் பெற்று நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிர் விபரம் குறித்து சுய உறுதிமொழி சான்றுடன்விண்ணப்பிக்க வேண்டும்.

    நபர் ஜாமீன் பேரில் ரூ.1,60,000-வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000- வரையிலும், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப நிலம் அல்லது குடியிருப்பு பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பயிர்க்கடன் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×