search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி அருகே கார் டிரைவர் கொலை வழக்கில்  கைதான கர்நாடகா ரவுடி உட்பட   3 பேர் சிறையில் அடைப்பு
    X

    தளி அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான கர்நாடகா ரவுடி உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

    • ஏரி கரையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
    • 3 பேரை தளி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலம் தொட்டதோகூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஓட்டுநர் சாந்தகுமார் (வயது30). இவரது மனைவி சுஷ்மா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் கார்த்தியாகினி என்ற மகள் உள்ளார்.

    கடந்த 13-ம் தேதி அங்குள்ள மதுக்கடை ஒன்றில் மது குடித்த போது சாந்தகுமாருக்கும் வீர்சந்திரா என்ற கிராமத்தை சேர்ந்த பல்வேறு கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நேபால் மஞ்சுநாத் (31), என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது சாந்தகுமார் நேபால் மஞ்சுநாத்தை அடித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து விடுவேன் என நேபால் மஞ்சுநாத் கூறியுள்ளார்.

    இதனால் அச்சமடைந்த சாந்தகுமார் எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உன்னை மன்னித்து விடுகிறேன். புகாரை வாபஸ் பெற்றுக்கொள் என கூறிய நேபால் மஞ்சுநாத் சாந்தகுமாரை கடந்த 24-ம் தேதி ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளிக்கு வருமாறு கூறியுள்ளார்.

    அங்கு வந்த சாந்தகுமாரை தனது நண்பர்களுடன் காரில் கடத்தி சென்ற நேபால் மஞ்சுநாத் தளி அருகே உள்ள எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரி கரையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ரவுடி நேபால் மஞ்சு நாத், பெங்களூரு மங்கம்மாபாளையத்தை சேர்ந்த சதீஷ் (22), பன்னார்கட்டாவை சேர்ந்த சுனில்குமார் (19), ஆகிய 3 பேரை தளி போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அவர்களை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×