என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்கு உள்ளான கார்.
கார் கவிழ்ந்து விபத்து
- கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.
- காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கருவளர்ச்சேரி ஊராட்சி பகுதியில் கும்பகோணத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாச்சியார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன எந்திரம் மூலம் காரை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.
இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






