என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டியில் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
- மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார்.
- சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சீதாலட்சுமி(34). இவருக்கும் அழகுமலை என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
அழகுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மனைவியின் 10 பவுன் நகைகளை அடகு வைத்து ஆட்டோ வாங்கினார். சீதாலட்சுமிக்கு குழந்தை இல்லை என்பதால் அதனை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் வீட்டைவிட்டு செல்லுமாறு அவரை விரட்டியுள்ளனர். இது குறித்து சீதாலட்சுமி தேனி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தர வின்பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீ சார்வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.