என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 2 நிறுவனங்கள் மீது வழக்கு

- தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் இதர வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர், தொழிலக பாதுகாப்பு சுகாதா இயக்க அதிகாரிகள் ஆகியோர் நேற்று சேலம் சிவதாபுரம், பனங்காடு பகுதிகளில் உள்ள வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, 18 வயதுக்கு
உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சைல்டு லைன் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்மூலமாக குறைந்தபட்ச 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.