என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
- இதனை தட்டி கேட்ட வெங்கடேஷனை, ஆத்திர மடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கி யதில் பலத்த காயமடைந்தார்.
- போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாைணை நடத்தி வருகின்றனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). விவசாயி.
இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன், மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும், நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் இவரது மாமியார் குடும்பத்தினர் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து, நிலத்தை சுவாதீனம் கொடுப்பதற்காக நேற்று செல்வம் (வயது42), குப்பம் மாள்(55), மாதம்மாள்(52), ஜெயராணி( 50), மாதேஷ்(40), ரவி( 60), மாதேஷ்( 31), ஆகியோர் நிலத்திற்கு சென்று டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர்.
இதனை தட்டி கேட்ட வெங்கடேஷனை, ஆத்திர மடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கி யதில் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாைணை நடத்தி வருகின்றனர்.