என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் பணம் அபேஸ்
- தனது ஓய்வூதிய பணம் சுமார் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு வந்தார்.
- அப்போது அவர் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 72).
இவர் வேளாண்மை பொறியியல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.
இவர் தனது ஓய்வூதிய பணம் சுமார் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு வந்தார்.
இதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள், அவர் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து, வலங்கைமான் அருகே உள்ள மின்பொறியாளர் அலுவலகத்தில் முன்பு சென்ற போது பணம் கீழே கிடப்பதாக அவரின் கவனத்தை திசை திருப்பினர்.
இதனை உண்மை என்று நம்பிய கிருஷ்ணமூர்த்தி கீழே குனிந்தார். அப்போது அவர் வைத்திருந்த பணப்பையை அந்த மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பினர்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.