search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் மார்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள்
    X

    குன்னூர் மார்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள்

    • போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
    • வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது

    ஊட்டி

    குன்னூர் நகரின் முக்கிய வீதிகளாக மவுண்ட்ரோடு, வி.பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளன.

    இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த சாலைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.

    அவ்வாறு சுற்றி திரியும் கால்நடைகள் சாலைகளில் செல்லும் வாகனங்களையும் மறித்து விடுகிறது. சில நேரங்களில் குறுக்கே வந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதேபோல் குன்னூர் மார்கெட் பகுதி, குன்னூர் கேஷ்பஜார், சாமண்ணா பூங்கா, வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம் உட்பட பகுதிகளிலும் மாடுகள் உலா வருகிறது.

    மார்க்கெட் பகுதியில் சுற்றிதிரியும் கால்நடைகள், அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை சேதப்படுத்தி வருகிறது.

    அத்துடன் அங்கு நிறுத்த படும் வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது சில சமயங்களில், நகரின் மையப்பகுதியான பஸ் ஸ்டாண்டில் கூட கூட்டமாக சுற்றி திரிகின்றன. எனவே சாலைகள் மற்றும் குன்னூர் மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×