என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு சி.சி.டி.வி-யில் கொள்ளையர்கள் உருவம் பதிவு

- நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
- வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் பெங்களூரில் ரிக் வண்டியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நவீனா (26). இவர் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நவீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர். அதேபோல் போதுப்பட்டி சரவணன் நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவர் முட்டை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (32). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் சென்றனர்.
கண்காணிப்பு கேமரா
இந்த தொடர் திருட்டு குறித்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ.க்கள் முருகன், சங்கீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓரீரு நாளில் கொள்ளை யர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.