search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா கொண்டாட்டம்
    X

    முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி கலைத்திருவிழாவில், கைவினைப் பொருட்கள் கண்காட்சியை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பார்வையிட்ட காட்சி.

    அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா கொண்டாட்டம்

    • வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது.
    • இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியை ரமா தலைமை வகித்தார். ஆசிரியை சுமதி வரவேற்றார். முத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில்குமார் கலைத்திருவிழா மற்றும் மாணவ–-மாணவியரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.

    இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரேவதி சசிகுமார், உறுப்பினர்கள் பிரபாகரன், மாதேஸ்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிறைவாக, ஆசிரியை மலர்கொடி நன்றி கூறினார்.

    இதேபோல் பொன்னா ரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திரு விழாவிற்கு, பள்ளித் தலைமையாசிரியை புனித ஞானதிலகம் தலைமை வகித்தார். பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ–மாணவியருக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பிரபாகரன், முன்னாள் தலைவர் வசந்தா காசிவிஸ்வநாதன், துணைத் தலைவர் கலா வதி பூவராகவன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனி சாமி, ஆசிரியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    Next Story
    ×