search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
    X

    கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்.

    நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

    • 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
    • ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு ரூ. 100 செலவு.

    நாகப்பட்டினம்:

    22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து நாகையில் இரண்டாவது நாளாக மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்னதர்.

    அப்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம், அதிகாரிகள் ஆய்வுகுறுவை அறுவடை முடிந்த நிலையில் மழையால் நனைந்த நெல்லை கொள்முதல் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

    அதனை தொடர்ந்து நேற்றைய தினம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனிடையே இரண்டாவது நாளாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குநர், எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆய்வில், கொள்முதல் செய்ய வந்த விவசாயிகளிடம் மத்திய குழுவினர் குறைகளை கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரி நெல்லை சேகரித்த மத்திய குழுவினர் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று சென்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் செலவு ஏற்படுவதாகவும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் தடைப்பட்டு நின்றால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதாக நினைக்காமல் அது நாட்டின் இழப்பு என கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வெண்மணி, வலிவலம், எட்டுக்குடி, உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×