என் மலர்
உள்ளூர் செய்திகள்
சமஸ்கிருத தேர்வில் வெற்றி பெற்ற 26 பேருக்கு சான்றிதழ்
- தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர்.
- லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.
செங்கோட்டை:
சமஸ்கிருத பாரதி சார்பில் தென் தமிழகத்தில் சாதிமத பேதமின்றி அனைவருக்கும் இலவச அஞ்சல் வழியில் சமஸ்கிருத மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை அம்மன் சன்னதி தெரு குருகுல பள்ளியில் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரிங்கேரி பாடசாலை அமைப்பாளர் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். முன்னதாக லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நெல்லை மாவட்ட சமஸ்கிருத மொழி ஆசிரியர்கள் லதா மாதா, நாகராஜன் மற்றும் செங்கோட்டை, தென்காசி பொறுப்பாளர்கள் தங்கம்மாள், உமா, உஷா, ஜெயா, வள்ளி, சீதாலெட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.