என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிறந்த குப்பை மேலாண்மை செய்யும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்று
- இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.
- மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சிறந்த குப்பை மேலாண்மை செய்யும் வணிக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சான்று வழங்கி பேசும்போது, நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கபடும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பையிலிருந்து செல்வம் என்ற திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.
துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் நகரை தூய்மை நகராக பராமரிக்க முடியும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்றார்.
நுண்ணுரம் தயாரிப்பு பணியை செய்துவரும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கான பாராட்டு சான்றினை செயலாளர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ஆதேஸ் தலைமையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர்கள், வீரையன், ஈ ஸ்வரன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் அம்பிகா, சுகாதார பணியாளர்கள், கலந்து க்கொண்டனர்.