என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது.
- சமூக ஆர்வலர்கள் டிக்சன் குமார், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சகி-ஒன் ஸ்டாப் சென்டர் சார்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் முத்து மாரியப்பன் வரவேற்று பேசினார். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது. சமூக ஆர்வலர்கள் டிக்சன் குமார், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கனகராஜ் செஸ் ஒலிம்பியாட் குறித்து உரையாற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தை மணி, வார்டு கவுன்சிலர்கள் கலாநிதி, வினோதினி, செல்வவிநாயகம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், சகி-ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.