search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் -அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    முதல் -அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்- கலெக்டர் தகவல்

    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள்.
    • 3-ம் பரிசாக ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.


    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மற்ற பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் (12 வயது முதல் 19 வயது வரை) நாளை ( வெள்ளிக்கிழமை ) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

    ம மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீட்டர் ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.

    கபடி விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 13-ந்தேதி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான தடகள போட்டிகள் (17 முதல் 25 வயது வரை), 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

    பொதுப்பிரிவினருக்கு (15 முதல் 35 வயது வரை), ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், கிரிக்கெட் பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

    அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ், தடகளம் ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1000-ம், வழங்கப்படுகிறது.

    மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்குஅழைத்துச்செல்லப்படுவார்கள்.

    இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×