என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுகாதாரமும், கல்வியும் அனைவருக்கும் கிடைக்க முதல்-அமைச்சர் வழிவகை செய்துள்ளார் - ஆ.ராசா எம்.பி. பேச்சு
- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.
வள்ளியூர் :
முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெல்லைகிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வள்ளியூர் செயலாளர் சேதுராமலிங்கம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை செயலாளர் ஜான் கென்னடி, பணகுடி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள்ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட அவைத் தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாள ரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தத்துவத்தின் அடையாளம். கட்சியையும், ஆட்சியையும் வளர்ச்சி அடைய செய்தவர். மிசா சட்டத்தில், திருமணமாகி 6 மாதத்தில் சிறை சென்றவர்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் உற்று நோக்குகின்றனர். கொரோனா காலத்தத்தில் மருத்துவர்களே செல்ல பயந்த கொரோனா வார்டில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியவர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இருந்தாலும் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மாதம் தோறும் பெண்கள் உரிமை தொகை ஆயிரம் ரூபாயை அண்ணா பிறந்தநாள் அன்று நிறைவேற்றுகிறோம்.
தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கவில்லை. இருப்பினும் கொரோனா காலத்தில் தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியை கொடுத்தார்.அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.மேலும் 13 ஆயிரம் கோடியில் மாதிரி பள்ளிகள் அமைத்து சுகாதாரம், கல்வியும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து உள்ளார்.
பேனா சிலை ஏன் வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். பெண் களுக்கு சொத்துரிமையில் பங்கு உண்டு என கையெழுத்து போட்டது, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கையெழுத்து மற்றும் பெண்களுக்கு கல்வி அதிகாரம் கொடுத்து கையெழுத்து போட்டது இந்த பேனா தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நாங்குநேரி எஸ்.ஏ.வி பெட்ரோல் பங்கில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்து 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை ஆ.ராசா திறந்து வைத்தார்.
நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோஷல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆதி பரமேஸ்வரன், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலை கண்ணு , மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கொண்டனர்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்