search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் - சண்முகையா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் - சண்முகையா எம்.எல்.ஏ. பேச்சு

    • தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி விமான நிலையம் , துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆர். ஆஸ்கர் வரவேற்று பேசினார். பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் திருமணி ஆனந்த், காளிதாசன், மாரிச்செல்வம், கார்த்தி, ரூபன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் மாலாசின்கா, சித்திரை புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் அளித்த 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டி

    கொரோனா காலக்க ட்டத்தில் 4 ஆயிரம் உதவித் தொகை, பால்விலை குறைப்பு, இலவச பஸ் பயணம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், கல்வி உதவித்தொகை, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி விமான நிலையம் துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அவருக்கு வெற்றியை வழங்கி மேலும் சாதனை பணிகள் தொடர வாய்ப் பளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் செந்தூர்பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கோட்டாளம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், அனஸ், பாலமுருகன், வக்கீல் அணி ரகுராமன், ஸ்பிக்நகர் பகுதி நிர்வாகிகள் வெள்ளைபாண்டி, அந்தோணிகுரூஸ், கல்பனா, ரகு, காளி, ஆனந்த், விவேகானந்தன், வட்ட செயலாளர் வசந்தி பால்பாண்டியன், பாஸ்கர், முத்துமாணிக்கம், அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×