search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் 8-ந் தேதி  1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் - அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி
    X

    தென்காசியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காட்சி. அருகில் கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்ளனர்.


    தென்காசியில் 8-ந் தேதி 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் - அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

    • 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் வர உள்ளார்.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் பேனர்கள் மற்றும் கட்டவுட் களை வைக்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக தென்காசி கணக்கப்பிள்ளை வலசை அருகே உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்வை யிட்டார். அப்பொழுது அவருடன் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வருகின்ற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் வர உள்ளார். சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காலை 7.30 மணிக்கு முதல்-அமைச்சர் தென்காசியில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு விழா நடைபெறும் இடத்திற்கு காலை 10 மணிக்கு வர உள்ளார். பின்னர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை நேரில் வழங்குகிறார்.

    நிகழ்ச்சிகள் முடிந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்கிறார். இருப்பினும் ரெயில் மூலம் தென்காசிக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வழி நெடு கிலும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விழா மேடை அமைக்கும் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரனுடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனிதுரை, ரவிசங்கர், திவான் ஒலி, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ஷெரிப், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர் ரஹீம், தொழிலதிபர் மாரிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி தற்பொழுது தென்காசி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் பேனர்கள் மற்றும் கட்டவுட் களை வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×