என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
Byமாலை மலர்25 April 2023 12:38 PM IST
- குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவிழாவையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமி எழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்பு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமிஎழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.
வருகின்ற 10-ம் திருநாளான மே மாதம் 4-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் சுற்றுபுற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
X