என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், அன்பு இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    X

    தஞ்சை எம்.ஆர்.சி. அன்பு இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது.

    தஞ்சையில், அன்பு இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரத்தை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினர்.
    • 82 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் ஆலோசனை மையம், தஞ்சாவூர் எம்.ஆர்.சி அன்பு இல்லத்தின் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடியது.

    நிகழ்ச்சி ஜெபப் பாடலுடன் தொடங்கியது. எம்.ஆர்.சி. அன்பு இல்ல நிறுவனர் ரூபன் வரவேற்புரை வழங்கினார். இல்லத்தின் தலைமை வார்டன் ரவி வாழ்த்துரை வழங்கினார்.

    குழந்தை சுவிசேஷ பெல்லோஷிப்பின் முன்னாள் இயக்குனர் கிறிஸ்டோபர் ஒரு பொம்மை நிகழ்ச்சியை நடத்தினார்.

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் எம்.ஆர்.சி இல்ல மாணவர்களை கலை நிகழ்ச்சிகளுடன் மகிழ்வித்தனர். குட்சமாரியன் கிளப் மூலம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    முனைவர் சி.ரவிதாஸ் தலைமையிலான இயற்பியல் துறை இந்த இல்லத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரத்தை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினர்.

    விரிவாக்கப் பணிகளின் தலைவர் முனைவர் வி.ஆனந்த் கிதியோன் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.இந்த இல்லத்தில் உள்ள 82 குழந்தைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    அவர்களும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியை மாணவர் ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம் தேவா ஆசிர் வழிகாட்டுதலின் கீழ் பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் ஆலோசகர்கள் சர்மிளா பானு, டேனியல் அஷ்ரத் செல்லையா மற்றும் முனைவர் எஸ்.லிடியா சூசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    Next Story
    ×