search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், நகர்மன்ற கூட்டம்
    X

    சீர்காழியில் நகர்மன்ற கூட்டம் நடந்தது.

    சீர்காழியில், நகர்மன்ற கூட்டம்

    • சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
    • குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார்.

    ஆணையர்(பொ) ஹேமலதா, பொறியாளர் சித்ரா, நகரமைப்புஆய்வாளர் மரகதம், மேலாளர் காதர்கான், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தல் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    சாமிநாதன் (திமுக):

    கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் கடந்த 6மாதம் முன்பு வாங்கிய நிலையில் வேறொரு இயந்திரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்றார்.

    ரமாமணி (அதிமுக):

    சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்திட வேண்டும்.

    வள்ளி (திமுக)பேசுகையில்:

    எனது வார்டில் இருவரை நாய்கள் கடித்துவிட்டது.

    நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ரம்யா(திமுக):

    17-வது வார்டில் தற்போது 1மின்விளக்கு மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும். 4மின் பம்புகள் பழுதாகியுள்ளது என்றார்.

    தேவதாஸ் (திமுக):

    9-வது வார்டில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

    குளத்தின் சறுக்கல் பக்கவாட்டில் கல் பதிக்காததால் மண் சரிந்து பாதிக்கப்படும்.குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    மேல்பூச்சு சிதிலமடைந்துள்ளதால் பணியாளர்கள் உள்ளே இறங்க அஞ்சுகின்றனர்.

    மினிபம்பு அமைத்துதரவேண்டும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கிய அரசுக்கு நன்றி என்றார்.

    வேல்முருகன்(பாமக):

    மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை நிருபயா வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கியதுபோன்ற கடுமையான தண்டைனை வழங்கவேண்டும்.

    மணிப்பூர் சம்பவத்தை கண்டனம் தெரிவிக்கிறோம். தென்பாதி பயணியர் விடுதி அருகே புதிதாக கல்வெர்ட் அமைத்துதரவேண்டும் என்றார்.

    தலைவர் துர்காராஜசேகரன்:

    மாமிச கழிவுகள் கொட்டும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

    17-வது வார்டில் பள்ளி கட்டடம் கட்ட அரசுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பபட்டு அனுமதி பெற காத்திருப்பில் உள்ளது மணிப்பூர் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்றார்.

    Next Story
    ×