என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
துடியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
- மற்ற வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையை விட்டு இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
- பொதுமக்கள் தடாகம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை:
கோவை துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பன்னிமடை- திப்பனூர் சாலை உள்ளது. இந்த பகுதியில் 4 வருடங்களாக சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் 40 அடி சாலை அமைக்க வேண்டிய இடத்தில் வெறும் 12 அடி மட்டுமே சாலை அமைப்பதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்ததும் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தடாகம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் 40 அடிக்கு சாலை அமைக்கலாம். ஆனால் வெறும் 12 அடிக்கே அமைக்கின்றனர்.
இதனால் மற்ற வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையை விட்டு இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே 16 அடிக்காவது சாலையை அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.