என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
- கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள படப்பை காட்டில் ஒன்றிய தென்னை விவசாயிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. அத்திவெட்டி வடிவேல் மூர்த்தி தலைமை வகித்தார் . மன்னாங்காடு முத்துராமன், சிராங்குடி கோவிந்தராசு, மூத்தாகுறிச்சி ராஜேந்திரன், அத்திவெட்டி அண்ணாதுரை, ஆலத்தூர் பாஸ்கர், புலவஞ்சி கோவிந்தன், சிரமேல்குடி ராஜேந்திரன், புலவஞ்சி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை ஒரு கிலோ ஒன்றுக்கு 250 விலை நிர்ணய செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதனை அடுத்து கருப்பூர் முருகேசன், சிரமேல்குடி தமிழ்ச்செல்வன், புலவஞ்சி செல்லக்கண்ணு, அத்திவெட்டி பெரிய தம்பி, புலவஞ்சி திருஞானசம்பந்தம், விக்ரமம் தனபால், பெரிய கோட்டை முருகேசன், ஆலத்தூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






