search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: விக்கிரவாண்டியில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை
    X

    விக்கிரவாண்டி ெரயில் நிலையம், பஸ் நிலையம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடந்தது.

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: விக்கிரவாண்டியில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை

    • தமிழகம் முழுவதும் போலீசாரால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.

    விக்கிரவாண்டி, நவ.12–-

    கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாரால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்திரவின் பேரில் விக்கிர வாண்டியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ெரயில் நிலையம், பஸ் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், சப்-–இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி , சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் ராஜேஷ்கண்ணா, பாரதி, மோப்ப நாய் பயிற்சியாளர் வருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வெடிமருந்து மோப்ப நாய் ராணி உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். பி ன்னர் பொதுமக்களிடம் வெடிகுண்டுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.

    Next Story
    ×