search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க செயற்குழு கூட்டம்
    X

    கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க செயற்குழு கூட்டம்

    • ரூ.25 கோடி மின்கட்டண பாக்கியை 6 தவணைகளில் செலுத்த முடிவு
    • சோமனூர் காந்தி நினைவிடம் அமைப்பது என்று தீர்மானம்

    கருமத்தம்பட்டி,

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க செயற்குழு கூட்டம், சோமனூர் அடுத்த கோம்பக்காடு புதூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி, துணைத் தலைவர் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் வேலுச்சாமி, சதீஷ்குமார் வெற்றிவேல் உள்பட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

    சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 2500 விசைத்தறி யாளர்கள்கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரையில் ரூ.25 கோடிக்கு மின்கட்டண பாக்கி வைத்து உள்ளனர்.

    இதனை அரசாங்கம் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி 6 தவணையாக செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சோமனூரில் ஜவுளி சந்தை, சோலார் மின்சாரம் மற்றும் தறிகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுக ளுக்கு அனுப்பி வைப்பது, சோமனூர் காந்தி என்று அழைக்கப்படும் பழனிச்சாமி முதலாம் ஆண்டு நினைவு தினத்திற் குள் நினைவிடம் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×