என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராம ஊராட்சி சேவை முகாமில் அரசின் இலவச திட்டத்திற்கு பணம் வசூல்
- முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கும் அட்டை பதிவு செய்யும் நேற்று முகாம் நடந்தது.
- இந்த முகாமில் பொதுமக்களிடம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கும் அட்டை பதிவு செய்யும் நேற்று முகாம் நடந்தது.
இந்த முகாமில் பொதுமக்களிடம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் சௌமியா ஆகியோர் தலைமையில் கட்சியினர் ஊராட்சி சேவை மையத்தை முற்றுகையிட்டனர். மேலும் பள்ளிப்பாளையம் வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து, முகாமில் வசூல் செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கு இலவசமாக பதிவு செய்து ெகாடுக்க வேண்டும். பதிவுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என அங்கிருந்து அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி வசூலித்த தொகையை மீண்டும் பொதுமக்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.