search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    மயிலாடுதுறையில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு

    • ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி.
    • தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காமராஜர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கி ணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி நிருபர்களிடம் கூறுகையில்:-

    மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அவற்றில், தரங்கம்பாடி மயிலாடுதுறை-காமராஜர் சாலையில் ரூ. 6 கோடி 47 லட்சம் செலவில் சாலையில் இருபுறமும் அகலப்படுத்தியும், தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல், கல்லணை காவேரிப்பட்டினம் தென்னமரசி சாலை ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவில் சாலைகள் இருபுறமும் அகலப்படுத்தும் பணி, தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் உடன் இருந்தார்.

    Next Story
    ×