என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணை- கலெக்டர் வழங்கினார்
- ஒரு பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
- பயனாளிகளுக்கு பணி தொடங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையை வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த மனுக்களைவிசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பணி துவங்குவதற்கான நிர்வாக அனுமதி ஆணையினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.