search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில்  வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
    X

    சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்த காட்சி.

    ஏற்காட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×