search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அரசு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தை ஆய்வு செய்த, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்வேகம்.

    வாழப்பாடி அரசு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
    • பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து, காரிப்பட்டியில் பொது வினியோக கூட்டுறவு அங்காடியை ஆய்வு செய்த அவர், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியையும், சர்க்கார் வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தையும் திடீர்ஆய்வு செய்தார்.

    வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மீட்கப்பட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட, பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். இந்த நிலம் தொடர்பான ஆவணங்களை வாழப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் விஷ்ணுவர்த்தினி, வாழப்பாடி தாசில்தார் (பொ) ரவிக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்தரகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×