search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோடும் வீதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    தேரோடும் வீதிகளில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    தேரோடும் வீதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
    • தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேரோடும் தஞ்சை மேலவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.

    தேரோடும் வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    இன்று தேரோடும் வீதிகளில் அலுவலர்கள், போலீசாருடன் நேரடியாக கள ஆய்வு நடத்தினோம்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேரோட்டத்தை காண பக்தர்கள், பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க அந்தந்த துறை அலுவலர்க ளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேரோட்டத்தை காண பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தேரோடும் வீதி சாலைகளில் உள்ள சிறு சிறு பள்ளங்கள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்படும்.

    மேலும் அரசு கூறியப்படி தேரோடும் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே எடுத்து கூறி உள்ளோம்.

    அதாவது தேரோடும் பகுதியில் அன்றைய தினம் செய்ய வேண்டிய மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.

    இது தவிர தேரோட்டம் இன்று தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது ஆணையர் சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி,

    இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×