என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாங்குநேரி அருகே கல்லூரி மாணவி மாயம் நாங்குநேரி அருகே கல்லூரி மாணவி மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/09/1878536-5girlmissing.webp)
X
நாங்குநேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
By
மாலை மலர்9 May 2023 2:31 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கல்லூரிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு அந்த மாணவி சென்றுள்ளார்.
- மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி நெல்லையில் உள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
X