என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோவிலில் 3-ந்தேதி மாங்கனி திருவிழா
- மழை வளம் செழிக்க சம்பந்தரின் மழைப்பதிகப் பாடல்களைப் பாடி விண்ணப்பம் செய்யப்படும்.
- மாலை 4.30 மணிக்கு மேல் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் அமைந்துள்ள காரைக்காலம்மையார் கோவில் மண்டபத்தில் மாங்கனி பூஜை நடைபெற்று மாங்கனி பிரசாதம் வழங்கப்படும்.
உடன்குடி:
காரைக்கா லம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு வருகிற 3-ந்தேதி (திங்கட் கிழமை) மாங்கனி திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை குலசேகரன்பட்டி னம் அறம் வளர்த்த அம்மன் கோவிலில் நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினர் ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமையில் காரைக்கால் அம்மையார் பதிகங்களையும் மற்றும் காரைக்காலல் அம்மையார் பெரியபுராணம் பாடல்களையும் திருமுறை விண்ணப்பம் செய்வார்கள்.
மேலும் மழை வளம் செழிக்க சம்பந்தரின் மழைப்பதிகப் பாடல்களைப் பாடி விண்ணப்பம் செய்யப் படும். மாலை 4.30 மணிக்கு மேல் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் அமைந்துள்ள காரைக்கா லம்மையார் கோவில் மண்டபத்தில் மாங்கனி பூஜை நடைபெற்று மாங்கனி பிரசாதம் வழங்கப்படும். மதியம் மாகேஸ்வர பூஜை உண்டு. பக்தர்கள் அனைவரும் திருமுறை விண்ணப்பத்திலும், மாங்கனி பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது