search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்து கைவரிசை
    X

    ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்து கைவரிசை

    • மூதாட்டி, வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது
    • யோனேஷ்உசேனும், மொகல்ஜாபரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்

    கோவை,

    கோவை சூலூர் ஜெர்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 74). இவர் சம்பவத்தன்று காலை வீட்டுவாசலை பெருக்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஈஸ்வரியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல்வேகத்தில் தப்பிசென்றனர்.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர். இதில் மூதாட்டி ஈஸ்வரியிடம் செயின் பறித்த 2 பேர் பற்றிய விவரம் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் செட்டிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கவுசிக் என்பவரிடமும் 2 பவுன் சங்கிலியை பறித்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சூலூர் அடுத்த கலங்கல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த யோனேஷ்உசேன் (22), ஆந்திராவை சேர்ந்த மொகல்ஜாபர் (21) என்பது தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை யில் அவர்கள் பற்றிய மேலும் திடுக்கிடும் தகவ ல்கள் வெளியாகி உள்ளன.

    யோனேஷ்உசேன், மொகல்ஜாபர் ஆகிய 2 பேரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் யோனேஷ்உசேன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி யில் குடியேறி வசித்து வந்து உள்ளார்.

    அப்போது அவருக்கு வழிப்பறியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. அதன்படி இவர் ஆந்திராவில் வசித்த மொகல்ஜாபரை கூட்டு சேர்த்து கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு பெருந்துறை, சேலம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளனர்.

    வாரம் ஒரு மாவட்டம் என்ற ரீதியில் அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளது. எனவே அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கோவையில் வழிப்பறி செய்துவிட்டு அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது.

    இந்த நிலையில் தான் அவர்களை சூலூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து சூலூர் ஈஸ்வரி, செட்டிப்பாளையம் கவுசிக் ஆகியோரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தாக யோனேஷ்உ சேன், மொகல்ஜாபரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலி, வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×