என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சம்பளம் அதிகமாக கேட்டதால் டிரைவரை தாக்கிய நிறுவன உரிமையாளர் கைது
- பிரசாந்த் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது.
- ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த தேங்காய் மட்டை எடுத்து பிரசாந்தை சரமாரியாக தாக்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது33). டிரைவரான இவர் அதேபகுதியில் உள்ள தனியார் தண்ணீர்கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் கடந்த 9 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தை முல்லை நகரைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் தரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதன்காரணமாக கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சம்பளம் உயர்த்தி தருவதாகவும் உடனே பிரசாந்தை வேலைக்கு வருமாறும் ரமேஷ் தெரிவித்தார். அவரது பேச்சை கேட்டு பிரசாந்த் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு ரமேஷூக்கும், பிரசாந்திற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த தேங்காய் மட்டை எடுத்து பிரசாந்தை சரமாரியாக தாக்கினார். இதில் பிரசாந்த பலத்த காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரசாந்த் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.