search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- தாசில்தாரிடம் கிராமமக்கள் மனு
    X

    சீர்காழி தாசில்தாரிடம் மனு அளித்த திட்டு கிராம மக்கள்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- தாசில்தாரிடம் கிராமமக்கள் மனு

    • கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
    • நாதல்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    சீர்காழி:

    சீர்காழியை அருகே உள்ள முதலை மேடு திட்டும், நாதல் படுகை கிராம மக்கள் ஒன்று திரண்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்தனர்.

    பின்னர் தாசில்தார் செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    தற்போது திட்டு கிராமத்தில் செய்து வரும் நிவாரண பணிகள் தற்காலிகமானது.

    நிரந்தரமாக தங்கள் பகுதிகளுக்கு செய்து தரவேண்டிய பணிகளாக கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.

    திட்டு கிராம சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும்.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவனை அமைத்து தரவேண்டும்.

    கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பரிசீலனை செய்யவில்லை என்றால் வருகின்ற 4 -ஆம் தேதி கொள்ளிடம் கடைவீதியில் நாதலப்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×