search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதியார் பிறந்தநாளையொட்டி நெல்லை  அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்
    X

    பாரதியார் பிறந்தநாளையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்

    • மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.
    • பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

    நெல்லை:

    மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

    பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 1 முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் ஓவியப்போட்டியும் நடைபெறுகிறது.

    இதேப்போல் கல்லூரி மாணவர்களுக்கு சரித்திர தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகள் 18-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படுகிறது. அன்று காலை 9.30 மணிக்குள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியில் ஓவியங்கள் வரைவதற்கான பேப்பர்கள் வழங்கப்படும். ஆனால் எழுது பொருட்களும், தேர்வு எழுத தேவையான அட்டை யையும் மாணவர்கள் கொண்டு வரவேண்டும். போட்டி யில் வெற்றி பெறுபவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    இத்தகவலை நெல்லை அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×