என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    திருவேங்கடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி பேசியபோது எடுத்தபடம்.

    தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • திருவேங்கடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.
    • சாம்பவர்வடகரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மூர்த்தி தலைமை தாங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நேற்று தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவேங்கடத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இதில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் சங்கரன் கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், திருவேங்கடம் நகர துணை செயலாளர் பாலமுருகன் அவைத்தலைவர் ராஜசேகரன், முத்தையா, நிர்மலா தேவி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாம்பவர் வடகரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வெங்கடேஷ், பேரூர் செயலாளர் நல்லமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா தலைமையிலும், ராயகிரி பேரூராட்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் தலைமையிலும், வாசு தேவநல்லூரில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரைப்பாண்டியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×