என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணியில் இருந்த போது தாக்கியதை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- பலத்த காயம் அடைந்த 2 மின் ஊழியர்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கக்கோரி மின்ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
வண்ணார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளர் முத்து–கிருஷ்ணன். சமாதானபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 2 மின் ஊழியர்களும் நேற்றிரவு ராஜா புதுக்குடியிருப்பு பகுதியில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுகொண்டி ருந்தனர்.
தாக்குதல்
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மின் ஊழியர்களை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கக்கோரியும் மின்ஊழியர்கள் சமாதானபுரம் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ. ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
அவர்களுடன் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். ஊழியர்கள் தாக்கப்பட்டது குறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.