என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை கலெக்டருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கி பாராட்டு
- பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தில் முதல் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
- அதன்படி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிப்பதக்கம்,பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர்:
பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண் குழந்தைகள் நலனுக்காக தமிழக அரசு அமல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொது மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தில் முதல் மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் இடத்தை கோவையும், 2-ம் இடத்தை தஞ்சாவூரும், 3-ம் இடத்தை கரூர் மாவட்டமும் பிடித்து சாதனை படைத்துள்ளன.
இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக பணியாற்றிய கோவை ,தஞ்சாவூர், கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அதன்படி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிப் பதக்கம் , பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சாதனை படைத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை கடைக்கோடி வரை உள்ள மக்களுக்கு சென்று சேரும் வகையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அரசின் திட்டங்கள் எளிதாக கிடைக்கின்றன என்று ஏழை மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்ட நடவடிக்கை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு அரசின் நல திட்டங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செயல்படுத்தி வருகிறார். தற்போது பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பான பணிக்காக பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து மக்கள் கலெக்டராக விளங்கி வருகிறார். கலெக்டரின் நல்ல செயல்களால் தமிழக அளவில் தஞ்சாவூர் மாவட்டம் புகழ் பெற்று விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மேலும் மேலும் பெருமை சேர்த்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்