என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
தூத்துக்குடியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்
- முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் கண்டன உரையாற்றினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான சாமுவேல் ஞானதுரை தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மண்டல தலைவர் ராஜன், மடத்தூர் தனபால்ராஜ், காமாட்சி, தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முள்ளக்காடு கிராம காங்கிரஸ் கமிட்டி வைகுண்டவாசகம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் கண்டன உரையாற்றி பேசும்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் குடும்பத்தில் இருந்து வந்த ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை ஏற்கமுடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடும் என்று பேசினார். கூட்டத்தில் மகாராஜன், ரத்தினபாண்டி, பிரியா, இசக்கியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






