search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தி நடைபயணத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    ராகுல்காந்தி நடைபயணத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேச்சு

    • அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • இந்த நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலு வலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி. வருகிற 8-ந் தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கி.மீ. தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடை கிறார்.

    இந்த நடை பயணத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபட வில்லை.

    காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், அம்பை முன்னாள் வட்டாரத் தலைவர் சங்கர நாராய ணன்,வள்ளியூர் வட்டார தலைவர் அல்போன்ஸ் ராஜா,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ரமேஷ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் போத்திராஜ் வினோத், மாநில மகிளா காங்கிரஸ் பொது மற்றும் இணைச் செயலாளர்கள் குளோரிந்தால் கமலா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர்கள்,பஞ்சாயத்து தலைவர்கள் கிராம காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள்,வார்டு தலைவர்கள் மகளிரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×