என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்.
கயத்தாறில் காங்கிரசார் சாலை மறியல்; 7 பேர் கைது
- ராகுல் காந்தி எம்.பி.க்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
- கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து, கயத்தாறில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை தலைவர் வக்கீல் அய்யலுச்சாமி தலைமையில் கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளரும், பன்னீர்குளம் பஞ்சாயத்து தலைவருமான பொன்னுச்சாமிபாண்டியன், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு நகர செயலாளர் ஏசுதாஸ் மற்றும் நிர்வாகிகள் பொன்னையா, சங்கரன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் அய்யலுச்சாமி உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






