என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்- ஏராளமானோர் கைது
- விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- நெல்லை, நாங்குநேரியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 183 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் ஆர்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினார்கள். ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று முக்கிய நகரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்வதற்காக கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் எழும்பூர் அழகு முத்துகோன் ரவுண்டானா அருகில் கையில் கொடி மற்றும் பதாகைகளுடன் திரண்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்.பி. தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், ரஞ்சன்குமார், டெல்லிபாபு, முத்தழகன், அடையாறுதுரை மற்றும் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், திருவான்மியூர் டி.கே. முரளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். உடனே போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மார்த்தாண்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
போலீசார் தடுத்தபோது மறியலில் ஈடுபட்டதால் போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருப்பூர், திருச்சி, ஆரணி, உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்