என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கட்டுமானம், அமைப்பு சாரா நலவாரிய ஓய்வூதியதாரர்கள் இணையதளம் மூலம் உயிர்வாழ் சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும்- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை, தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் வருகிற ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றினை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கீழ்கண்ட விவரங்களுடன் பதிவேற்றம் செய்யுமாறும், உயிர்வாழ் சான்றினை தாக்கல் செய்வதற்கு யாரும் நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையினை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். (தவறான ஆதார் எண் உள்ளீடு செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்). வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, எம்.ஐ.சி.ஆர்.கோடு ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய ஓய்வூதியதாரர்கள், அவர்களது சாதியை சரியாக குறிப்பிட வேண்டும்.
புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அசல் அட்டை ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்றுக்கு ஆதாரமாக ஓய்வூதிய ஆணை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர் அவரது ஆதார் அட்டையினை கையில் பிடித்துக் கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெல்லை, தென்காசியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்