search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில்  ரூ.9.30 லட்சம் மதிப்பில்  சத்துணவு கூடம் கட்டும் பணி
    X

    மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.9.30 லட்சம் மதிப்பில் சத்துணவு கூடம் கட்டும் பணி

    • ரூ.50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர மண்புழு உரக்கூடத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.
    • மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், பொக்காபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள தேன்வளா்ப்பு பெட்டியின் பயன்பாடு குறித்தும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர மண்புழு உரக்கூடத்தின் செயல்பாட்டினையும், பாரத பிரதமரின் நுண்ணுயிா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் 100 சதவீதம் மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள நுண்ணு யிா்ப் பாசன கருவியின் செயல்பாடு களையும் விவசாயிகளிடம் கலெக்டர் அம்ரித் கேட்டறிந்தாா்.

    முன்னதாக, மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.9.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டாா். பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு, மாணவ, மாணவா்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா்.

    ஆய்வின்போது தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் ஐஸ்வா்யா, தோட்டக்கலை அலுவலா் அரவிந்த்,

    உதவி மகளிா் திட்ட அலுலா் ஜெயராணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×