என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்புகலூரில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம் திருப்புகலூரில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/12/1848520-1603011-1nagappattinam.webp)
X
பூமி பூஜை நடைபெற்றது
திருப்புகலூரில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்
By
மாலை மலர்12 March 2023 3:15 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருப்புகலூர் மேலப்பகுதி முதல் அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் திருப்புகலூர் மேலப்பகுதி முதல் கீழஆமப்பட்டம், வவ்வாலடி, அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபிசரளா பக்கிரிசாமி, ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story
×
X