என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி தீவிரம் அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி தீவிரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/03/1816583-kothagiri-govt-hospital.webp)
X
அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி தீவிரம்
By
மாலை மலர்3 Jan 2023 3:55 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனையின் பழைய அவசர சிகிச்சை பிரிவு போதிய வசதிகள் இல்லாததால் ஒரே சமயம் அதிக நோயாளிகள் வந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் விதமாக மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கியது. தற்போது அந்த கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்கான கட்டிட பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story
×
X